பயிர்களை தாக்கும் மாவுபூச்சியை இயற்கை முறையில் எப்படி அழிக்கலாம்-பஞ்சகவ்யாசித்தர் டாக்டர் கே.நடராஜன்

Travel360Tv
0

 

மாவுப்பூச்சியில் இருந்து பயிர்களைக் காப்பது எப்படி?

பேராகாக்கஸ் மார்ஜினேட்டஸ்

இந்த மாவுப் பூச்சியானது பப்பாளி, மரவள்ளி, கொய்யா, மல்பெரி, பருத்தி, கத்தரி, வெண்டை, செம்பருத்தி ஆகிய செடிகளை அதிகளவு தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றன.

இந்த மாவுப்பூச்சியின் தாக்குதலால் பயிர்கள் 30 முதல் 40 சதவீதம் வரை மகசூல் இழக்க வாய்ப்புள்ளது. வறட்சியும், வெப்பமும் அதிகமாக உள்ள கோடை காலங்களில் மாவுப்பூச்சியின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படும்.

மாவுப்பூச்சியின் குறுகிய வளர்ச்சிக் காலமும், பூச்சியின் அதிக இனப்பெருக்கத் திறனும், இப் பூச்சியின் மேல் இருக்கும் மாவு போன்ற பாதுகாப்பு கவசத்தால் பூச்சிக்கொல்லிகள் ஊடுருவிச் செல்வதைத் தடுக்கும் திறனும் உள்ளதால் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் இப் பூச்சியைக் கட்டுப்படுத்த இயலவில்லை.


Post a Comment

0Comments
Post a Comment (0)